ஈட்டி எறிதல் சாதனை வீரருக்கும் மகளிர் கைப்பந்தாட்ட அணித் தலைவிக்கும் விமானப்படைப் பாராட்டு
இலங்கை விமானப்படைத் (Sri Lanka Air Force, SLAF) தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க (Bandu Edirisinghe), விமானப்படை விளையாட்டுத்துறைக்குச் செய்த பங்களிப்புகள் மற்றும் திறமையான பெறுபேறுகளுக்காக இரு விளையாட்டு வீரர்களைப் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் (Sri Lanka) ஈட்டி எறிதல் (Javelin Throw) சாதனையாளரான சார்ஜன்ட் ருமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage), விமானப்படை மகளிர் கைப்பந்தாட்ட (Handball) அணித் தலைவி கோப்ரல் எரந்தி WP (Erandi WP) ஆகியோருக்கு, விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற தளபதியின் பரிசோதனை நிகழ்வில் பாராட்டுகள் வழங்கப்பட்டன.
அவர்களது விளையாட்டுச் சாதனைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விமானப்படைக்குப் பெற்றுத்தந்த அங்கீகாரம் இதன்போது பாராட்டப்பட்டது. விமானப்படை விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பும் சுட்டிக்காட்டப்பட்டது.